தமிழக செய்திகள்

சொத்துவரி, குடிநீர் வரியை வாட்ஸ்அப் மூலம் செலுத்தலாம் - சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு

சொத்து வரி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கட்டணங்கள், பிறப்பு-இறப்பு சான்றிதழ் சேவைகள், புகார் பதிவு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட 42 சேவைகள் வாட்ஸ் அப் வழியாக செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு குடிமை சேவைகளை இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் தளங்கள் மூலம் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் சொத்து வரி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கட்டணங்கள், பிறப்பு-இறப்பு சான்றிதழ் சேவைகள், புகார் பதிவு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட 42 சேவைகள் வாட்ஸ் அப் வழியாக செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சாட்பாட் எண் 9445061913 மூலம் தங்களது சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை எளிதாகவும், பாதுகாப்பாகவும் செலுத்தலாம். மேலும் கட்டண விவரங்கள், ரசீது களையும் நிலுவைத் தொகைகள் மற்றும் வசதிகளையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவைகள் மூலம் பொதுமக்கள் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேரமும் மிச்சமாகிறது. 24 மணி நேரமும் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனவே சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பொதுமக்களும் வாட்ஸ்அப் சேவைகளை பயன்படுத்தி சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை காலதாமதம் இல்லாமல் செலுத்தி பயன்பெறுமாறு மாநகராட்சி கமிஷனர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.