தமிழ்நாடு மின்சார வாரியம் 
தமிழக செய்திகள்

வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 4-வது குறுகிய கால டெண்டரை வெளியிட்ட மின்சார வாரியம்

மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் மின்சாரம் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான நான்காவது குறுகிய கால டெண்டரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மின்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கி உள்ளது. இதில் ஏற்கனவே மூன்று கட்டங்களாக மின்சார வாங்க டெண்டர் விடப்பட்டிருந்த நிலையில் இப்போது நான்காவது குறுகிய கால டெண்டரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, வரும் நவம்பர் மாதம் முதல் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை, மூன்று மாத காலத்திற்கு மொத்தம்

4,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் 1,400 மெகாவாட், டிசம்பர் மாதத்தில் 700 மெகாவாட், ஜனவரி மாதத்தில் 2,800 மெகாவாட் என மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், முழு நாளுக்கான மின்சாரத் தேவை மட்டுமின்றி, அதிக மின்தேவை உள்ள நேரங்களான அதிகாலை 12 மணி முதல் காலை 6 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் மின்சாரம் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்சார வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மின் உற்பத்தியாளர்கள் மூன்று பிரிவுகளிலும் பங்கேற்று மின்சாரத்தை வழங்குவதற்கான விலையைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறுகிய கால டெண்டர் மூலம் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதற்கான கொள்முதல் விலை மற்றும் ஒப்பந்த விவரங்கள் அடுத்தகட்டத்தில் முக்கியத்துவம் பெறும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT