தமிழ்நாடு செய்திகள்

பல்லடத்தில் பிரதமர் மோடி- பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு

திறந்த ஜீப்பில் பயணித்த பிரதமர் மோடி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி வந்தார்.பிரதமர் மோடி பயணிக்கும் வாகனம் மீது மலர்களை தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாலை மலர்

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவின் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.

இதற்காக அவர் கேரளாவில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். பின்னர் சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாதப்பூருக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். இதன்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திறந்த ஜீப்பில் பயணித்த பிரதமர் மோடி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி வந்தார். அவருடன் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பயணித்தனர். பிரதமர் மோடி பயணிக்கும் வாகனம் மீது மலர்களை தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கூட்டத்தில் ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.