தமிழக செய்திகள்

தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து பிரதமர் ஆலோசனை வழங்கி வருகிறார்.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

பாஜக வேட்பாள் பட்டியல் நேற்று வெளியான நிலையில், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து பிரதமர் ஆலோசனை வழங்கி வருகிறார்.

எல்.முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT