தமிழக செய்திகள்

தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு- மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்

ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார்.

மதுரை:

தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு ஜனாதிபதி வருகை தந்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்றபின்பு, திரவுபதி முர்மு முதன் முறையாக இன்று தமிழகம் வருகை வந்தார்.

ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். 2 நாள் பயணமாக தமிழகம் வந்த ஜனாதிபதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார்.

அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்பமரியாதையும் வழங்கப்பட்ட உள்ளது. அவருக்கு கோவில் சார்பாக குங்குமம், மீனாட்சி அம்மன் சிலை பிரசாதமாக வழங்கப்படவுள்ளது. குடியரசு தலைவர் வருகையையொட்டி 3500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்குப்பின் சற்று நேரம் ஓய்வு எடுக்கும் அவர், பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து விமானத்தில் கோவை செல்லும் அவர், ஈஷா யோகா மையம் சார்பில் நடக்கும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார்.

SCROLL FOR NEXT