முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு இன்று 2026-27-ம் ஆண்டிற்கான நிதிநிலை பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம்.
* தவெக அரசு பட்ஜெட்டில் வாசித்த திட்டங்கள் சொல்லாக இல்லாமல் செயலாக மாற்ற வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை.
* தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.
* வாக்குறுதிகளை திட்டங்களாக செயல்படுத்த வேண்டும்.
* தவெக அரசு பட்ஜெட்டில் வாசித்த திட்டங்கள் சொல்லாக இல்லாமல் செயலாக மாற்ற வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை.
* நீர் மிகை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.
* மாவட்டந்தோறும் தொழிற்சாலைகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற எந்த அறிவிப்பும் இல்லை.
* ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் தமிழகத்தில் கடன் உள்ளது என்ற அறிவிப்பு வேதனை தருகிறது.
* ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்று தனி தொழிற்சாலைகள் குறித்து அறிவித்து இருக்க வேண்டும்.
* தமிழக அரசு கடனை எப்படி அடைக்க போகிறது என்ற அறிவிப்பை வெளியிடவில்லை.
* வரவை விட செலவு அதிகமாக உள்ளது கவலை அளிக்கிறது.
* கூவம் நதியை சீரமைத்து மேம்படுத்துவதான அறிவிப்பு, ஏசி மின் பேருந்து அறிவிப்பு, சாலைகளை சீரமைக்கும் திட்டங்களை பாராட்டுகிறேன்.
* முந்தைய ஆட்சியில் இருந்து அதிகமாக கடன் உள்ள நிலையில் மேலும் பல புதிய திட்டங்களால் இன்னமும் கடன் அதிகரிக்கும்.
* கடன் இல்லா நாடு தான் சுமையில்லா நாடு, சுமையில்லாத நாடாக தமிழகம் மாற வேண்டும் என்பதே தேமுதிக நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.