பிரேமலதா விஜயகாந்த் 
தமிழக செய்திகள்

தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்- பிரேமலதா வலியுறுத்தல்

சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.

பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிகை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றியதாவது:-

* பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து சட்டமன்ற உறுப்பினராக இந்த அவையில் என்னுடைய கருத்துக்களை தைரியமாக நான் பேசுகிறேன் என்றால், என்னுடைய பெற்றோர் மற்றும் கணவர் கேப்டன் அவர்களிடம் இருந்து வந்த தைரியம் தான்.

* விளையாட்டின் முக்கியத்துவத்தை ஒரு விளையாட்டு வீராங்கனையாக நான் உணர்ந்துள்ளேன்.

* இளைஞர்களின் எதிர்காலமே நாட்டின் வருங்காலம்.

* போதையில் இருந்து இளைஞர்களை மீட்க விளையாட்டு அவசியம்.

* இளைஞர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவது விளையாட்டு.

* கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த வேண்டும்.

* சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

* தமிழ்நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை மேம்படுத்த வேண்டும்.

* பல இடங்களில் அரசு அலுவலகங்கள் மிகவும் மோசமாக உள்ளன.

* விருத்தாசலம் அரசு அச்சகத்தை புனரமைக்க வேண்டும்.

* அரசு கட்டிடங்கள் தனியார் கட்டிடங்கள் போன்று பராமரிக்கப்பட வேண்டும்.

* சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.

* நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை விரைந்து வழங்க வேண்டும்.

* தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தை கலைத்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

* அரசு விடுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு தரப்பட வேண்டும்.

* அரசு விடுதிகள் சுத்தம், சுகாதாரம் இல்லாத கட்டிடங்களில் இயங்குகிறது, அதனை சீரமைக்க வேண்டும்.

* தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு போதைப்பொருளே காரணம்.

* இதுபோன்ற கொடூர குற்றங்களுக்கு என்கவுன்டர் மட்டுமே தீர்வு.

* லாக்அப் மரணங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.

* சபரிவர்மன் மட்டுமின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, அரசு பணி வழங்க வேண்டும்.

* தமிழர்கள் கொல்லப்படுவது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய தலைகுனிவாக இருக்கிறது.

* பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.