தமிழக செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுங்கள்- முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை விடுத்தார் பிரேமலதா

ஆணாக இருந்தாலும் இந்த சபைக்கு அன்னையாக இருந்து அனைவருக்கும் சபாநாயகர் வாய்ப்பு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டசபையில் 2-ம் நாள் அமர்வு இன்று கூடியது. அப்போது சட்டசபையில் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் பதவியேற்றுக்கொண்டார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி. பிரபாகரை, அவை முன்னவர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இருக்கையில் அமரவைத்தனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகருக்கு எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

* இந்த அவை மாண்புமிகு அவை, முன்னாள் முதலமைச்சர்கள் சிறப்பாகஆட்சி செய்துள்ளனர்.

* ஆணாக இருந்தாலும் இந்த சபைக்கு அன்னையாக இருந்து அனைவருக்கும் சபாநாயகர் வாய்ப்பு வழங்க வேண்டும்.

* திரையுலகில் விஜய்க்கு அண்ணன் விஜயகாந்த்.

* விஜயகாந்த் கூறியது போல் சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வையும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்.

* தமிழ்நாட்டில் இனி நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

* தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுங்கள் என முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்தார்.