தமிழக செய்திகள்

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!

சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ள அமல்ராஜுக்கு, தாம்பரம் காவல் ஆணையராக கூடுதல் பொறுப்பு.

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இன்றும் பணியிட மாற்று உத்தரவு வந்துள்ளது. அதன்படி தாம்பரம் காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் வகித்து வந்த தாம்பரம் காவல் ஆணையர் பதவி, சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ள அமல்ராஜுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் கார்த்திக் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT