தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

நார்வே செஸ் போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார்.

நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.

முன்னதாக, நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன், வின்சென்ட் கெய்மர் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர்.

இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார்.