சென்னை:
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கடும் வெப்பம் பதிவாகி உள்ளது. இதனிடையே சில நாட்களாக தமிழகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வரும் 17-ந்தேதி முதல் 10 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மே 17-ந்தேதி முதல் வெப்பம் அதிகரிக்கும். அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகக்கூடும் என கூறியுள்ளார்.