தமிழக செய்திகள்

தலைமை செயலகத்தில் மின்தடை- மின்சார வாரியம் விளக்கம்

காலை 11.25 மணியளவில் முதல் தளத்தில் இயல்பான மின் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது.

சென்னை தலைமை செயலகத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட மின்தடை உடனடியாக சீரமைக்கப்பட்டதாக மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மின்சார வாரியம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மின்தடை உடனடியாக சீரமைப்பு

சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் சில பகுதிகளில் மட்டும் இன்று (12.10.2026) காலை மின் விநியோகத்தில் தற்காலிகத் தடை ஏற்பட்டது.

மற்ற அனைத்து தளங்களிலும் மின் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி இயல்பாக இருந்தது. தலைமைச் செயலக வளாகத்திற்குள் உள்ள மின் விநியோகக் கட்டமைப்புகள் பொதுப்பணித் துறையின் (கட்டடங்கள்) பராமரிப்பில் உள்ளன. முதல் தளத்திற்கு மின்சாரம் வழங்கும் நான்கு மின் சுவிட்சுகளில், ஒரு சுவிட்சின் பி-ஃபேஸ் (B-Phase) மின் விநியோகத்தில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து, பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட மின் சுவிட்சில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து, மின் விநியோகத்தை மீண்டும் சீரமைத்தனர்.

இதனையடுத்து, காலை 11.25 மணியளவில் முதல் தளத்தில் இயல்பான மின் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தின் அனைத்து தளங்களிலும் தற்போது மின் விநியோகம் சீராக உள்ளது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT