தமிழக செய்திகள்

அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்

அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

* வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

* குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

* தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 3 தினங்களுக்கு நகரக்கூடும்.

* கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT