மழை 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வடமேற்கு வங்க கடல் பகுதியில் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி வி.ஆர்.துரை கூறியதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில் உத்திரமேரூர், மணலூர்பேட்டை, பெரம்பலூர், லப்பை குடிகாடு ஆகிய 4 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. 65 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது.

இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம் மற்றும் காரைக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மழை

நாளை 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழகத்தின் உள் மாவட்டங்கள் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவ்வப்போது கனமழை பெய்யக் கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக கடலோரப் பகுதிகள் வங்கக்கடல் பகுதியில் மீன் பிடிக்க எந்த எச்சரிக்கையும் இல்லை. கனமழை பெய்யும் போது இடி மின்னலுடன் பலத்த காற்றுவீசகூடும். சென்னையில் நேற்று மாலையில் தொடங்கிய மழை இரவு வரை பெய்தது. புறநகர் பகுதி பகுதிகளும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இதனால் கடந்த சில மாதங்களாக இருந்து வந்த வெப்பம் தணிந்தது. ஏ.சி. பயன்பாடும் நேற்று குறைந்தது.

SCROLL FOR NEXT