போரூர்- பூந்தமல்லி மெட்ரோ ரெயில்
தமிழக செய்திகள்

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் போரூர்- பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சேவை பயண விவரம்..!

Peak Hour நேரத்தில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருமுறை ரெயில் இயக்கப்படும்.

பிரதமர் மோடி போரூர்- பூந்தமல்லி இடையிலான மேட்ரோல் ரெயில் சேவை திட்டத்தை நாளை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜயின் கலந்து கொள்கிறார். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 22 ஆயிரம் போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.

மாலை 4 மணி முதல் பயணிகள் பயன்பாடு

பிரதமர் மோடி ரெயில் சேவையை தொடங்கி வைத்ததும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இரு மார்க்கத்திலும் பயணிகளின் பயன்பாட்டிற்காக இயக்கப்படும்.

நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் காலை 7 மணி முதல் இரவு 9 வரை ரெயில்கள் இயக்கப்படும். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை Peak Hour-ல் (காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை) ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருமுறையும், Peak Hour அல்லாத நேரத்தில் (காலை 7 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒருமுறையும் ரெயில் இயக்கப்படும்.

ஞாயிறு Peak Hour சேவை கிடையாது

ஞாயிற்றுக்கிழமை Peak Hour அல்லாத அடிப்படையில் ரெயில்கள் இயக்கப்படும்.

SCROLL FOR NEXT