தமிழக செய்திகள்

அ.தி.மு.க.வில் இருந்து பதவிக்காகவும், பணத்திற்காகவும் அங்கும் இங்கும் அலைகிறார்கள் - பொன்னையன்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. என்ற ஆல மரத்தை அசைக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.

அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.விற்கு முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் சென்றனர்.

இன்றும் சில முன்னாள் அமைச்சர்கள் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க. பொதுச் செயலாளர் அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

இதுபற்றி முன்னாள் அமைச்சரும் மூத்த அ.தி.மு.க. நிர்வாகியுமான பொன்னையனிடம் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. என்ற ஆல மரத்தை அசைக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறான எண்ணம். புரட்சித்தலைவியின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் சில முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பணத்துக்காகவும் பதவி ஆசைக்காகவும் அங்கும் இங்கும் அலைந்து திரிகிறார்கள், வெளியேறுகிறார்கள். அதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. உண்மையான தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.