கண்டக்டரை மாணவர்கள் தாக்கும் காட்சி 
தமிழக செய்திகள்

கண்டக்டரை சரமாரியாக தாக்கிய 2 மாணவர்களிடம் போலீசார் விசாரணை

கன்னடபாளையம் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது கீழே இறங்கிய கல்லூரி மாணவர்கள் கடும் ரகளையில் ஈடுபட்டனர்.

மாநகர பஸ்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரில் இருந்து ஆவடி நோக்கி மாநகர பஸ் (எண் 61கே) சென்றது. பஸ்சில் கண்டக்டராக திருத்தணியைச் சேர்ந்த சர்வேசன் என்பவர் இருந்தார். பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் நின்றனர். இதனை சர்வேசன் கண்டித்தார். இதனால் மாணவர்களுக்கும், கண்டக்டர் சர்வேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கல்லூரி மாணவர்கள்

கன்னடபாளையம் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது கீழே இறங்கிய கல்லூரி மாணவர்கள் கடும் ரகளையில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் திடீரென கண்டக்டர் சர்வேசனை சரமாரியாக தாக்கினர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார்

கண்டக்டர் மீது தாக்குதல் பற்றி அறிந்ததும் அவ்வழியாக வந்த 4 பஸ்களை டிரைவர்கள் அடுத்தடுத்து சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரைந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறியதை தொடர்ந்து டிரைவர்கள் பஸ்களை மீண்டும் இயக்கினர்.

மாநகர பஸ்

இதற்கிடையே மாணவர்கள் ஆவேசமாக கண்டக்டர் சர்வேசனை தாக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இந்த காட்சியை வைத்து கண்டக்டரை தாக்கிய 2 மாணவர்களை போலீசார் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 5 மாணவர்களை விசாரணைக்கு வரும்படி தெரிவித்து உள்ளனர். மாநகர பஸ்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SCROLL FOR NEXT