அன்பில் மகேஷ் 
தமிழக செய்திகள்

அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

அன்பில் மகேஷின் நீதிமன்ற காவலை அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அன்பில் மகேஷ் உட்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பிற சட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த மாதம் 26-ந் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர், சென்னை ஐகோர்ட்டில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்தபடி காணொலி மூலம் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்பின்பு, அன்பில் மகேஷின் நீதிமன்ற காவலை அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், அன்பில் மகேஷ், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், கார் டிரைவர் சரவணனை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3 பேரையும் ஒரே நேரத்தில் காவலில் எடுத்து விசாரிக்கும் வகையில் நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT