தமிழக செய்திகள்

பாடியநல்லூர் சோதனை சாவடியில் வாகனங்களில் போலீசார் அதிரடி சோதனை

ஆவடி காவல் ஆணையகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பாடியநல்லூர் சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு வரும் வாகனங்களில் கஞ்சா, குட்கா, உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என வாகனங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு காவல்துறை போதை பொருள் பழக்கத்தை ஒழிக்கவும் இளைஞர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆவடி காவல் ஆணையகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பாடியநல்லூர் சோதனை

அதன் தொடர்ச்சியாக ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், ஆவடி காவல் இணை ஆணையர் சிவக்குமார், செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு வரும் வாகனங்களில் கஞ்சா, குட்கா, உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என வாகனங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஜெகநாதன் காவல்துறையினர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT