காவல்துறை சட்டத்தை நிலைநாட்டும் அமைப்பு மட்டுமல்ல; நமது சமூகத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அரண்! என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காவல்துறை சட்டத்தை நிலைநாட்டும் அமைப்பு மட்டுமல்ல; நமது சமூகத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அரண்!
காவலர்கள் ஆற்றும் கடமையையும் அவர்களது அளப்பரிய தியாகத்தையும் காவலர் வீரவணக்க நாளில் நன்றியோடு நினைவுகூர்வோம்!
மக்களின் பாதுகாப்புக்காகவும் அமைதியான வாழ்வுக்காகவும் ஆபத்துகளை எதிர்கொண்டு, அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி இன்னுயிர் ஈந்த காவலர்கள் அனைவருக்கும் எனது வீரவணக்கம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.