தமிழக செய்திகள்

வாக்குச்சாவடிக்குள் நுழைய போலீசாருக்குத் தடை: தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு!

வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் அனுமதி இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும்.

வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை விதித்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளது.

அதன் விவரம்:

வாக்குச்சாவடிக்குள் தடை தமிழக டிஜிபி எச்சரிக்கை

தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் எக்காரணம் கொண்டும் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக்கூடாது.

வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் அனுமதி இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும்.

காவலர்கள் அனைவரும் வாக்குச்சாவடியின் வெளிக்கதவு அருகிலேயே நின்று தங்களது கடமையை ஆற்ற வேண்டும்.

இது குறித்து மண்டல ரோந்து பிரிவினர் மற்றும் வயர்லெஸ் கருவிகள் மூலம் காவலர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும்.

மண்டல ஐ.ஜி-க்கள் மற்றும் சரக டி.ஐ.ஜி-க்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

விதிமுறைகளில் இருந்து ஏதேனும் விலகல் அல்லது கவனக்குறைவு ஏற்பட்டால், கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.