சென்னை:
டாக்டர் அன்புமணி ராமதாசை தலைவராக கொண்டு செயல்படும் பா.ம.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பா.ம.க.வின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அருள்முருகன் டவர்ஸ் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. பா.ம.க.வின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.
பா.ம.க.வின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட கட்சியின் இணை அமைப்புகள், சார்பு அமைப்புகள் ஆகியவற்றின் மாநில-மாவட்ட அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.