தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. 27, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் தலா ஒரு இடத்திலும் களம் காண்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது போக, 169 தொகுதிகளில் அ.தி.மு.க. களம் காண்கிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிட்டார்.
இதில், விருத்தாசலத்தில் தமிழரசி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விருத்தாசலம் தொகுதியில் திமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக வேட்பாளர் பிரேமலதாவை எதிர்த்து பாமக சார்பில் தமிழரசி ஆதிமூலம் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.