தமிழக செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்: பழங்குடியின மக்களுக்கு அறுசுவை உணவு

கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி பழங்குடியின மக்கள் 400 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. தாமரை குளக்கரையில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

மாலை மலர்

பொன்னேரி:

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி மாநில செயலாளர் அத்திப்பட்டு அன்பாலயா சிவகுமார் தலைமையில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி பழங்குடியின மக்கள் 400 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊடகப் பிரிவு தலைவர் கோகுல், கிளை தலைவர் கண்ணன், நிர்வாகி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொன்னேரி நகர செயலாளர் சிவகுமார் தலைமையில் புதிய பஸ் நிலையம் அருகில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பொன்னேரி அடுத்த டி. வி. புரத்தில் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு செயலாளர் பிரபு ஏற்பாட்டில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் தாமரை குளக்கரையில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டன.