தமிழக செய்திகள்

7 மாத காத்திருப்புக்கு முடிவு! பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி?

பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 11 உயர்மட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.

பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்.11-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரை 14.64 கி.மீ. வழித்தடத்தில் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பயணிகள் சேவைக்கு தயார் நிலையில் உள்ளது.

பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 11 உயர்மட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.

2ம் கட்ட திட்டம்

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் 118.9 கி.மீ தொலைவுக்கு கட்டப்பட்டு வரும் 3 வழித்தடங்களில் (Corridors) முதற்கட்டமாக பூந்தமல்லி - வடபழனி இடையிலான வழித்தடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

கலங்கரை விளக்கம் மற்றும் பூந்தமல்லி புறவழிச்சாலைக்கு இடையே 26.1 கி.மீ தூரம் செல்லும் வழித்தடம் 4-இன் ஒரு பகுதியாகும்.

வடபழனி -பூந்தமல்லி இடையிலான 14.64 கி.மீ நீள வழித்தடத்தில் மொத்தம் 11 உயர்மட்ட நிலையங்கள் உள்ளன.

7 மாதங்கள் ஆன நிலையில்..

பூந்தமல்லி டூ வடபழனி இடையிலான மெட்ரோ பாதையின் பணிகள் முடிவடைந்து 7 மாதங்கள் ஆகியும் திறப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், முதல்வர் விஜய் முன்னிலையில் பிரதமர் மோடி அக்.11ம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT