தமிழ்நாடு செய்திகள்

கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பூஜை செய்த பிரதமர் மோடி

அரிச்சல்முனை கடற்கரையில் உள்ள புனித தூணிற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பிரதமர் மோடி கோதண்டராமர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து, அங்கு பூஜைகள் செய்தார்.

மாலை மலர்

ராமேஸ்வரம்:

மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், இன்று காலை தனுஷ்கோடியின் அரிச்சல்முனை பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு புனித நீராடினார். தொடர்ந்து அரிச்சல்முனை கடற்கரையை பார்வையிட்ட அவர் அங்குள்ள புனித தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். வண்ண மலர்களை தூவி கடற்கரையில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

இதையடுத்து, பிரதமர் மோடி கோதண்டராமர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அங்கு பூஜை செய்தார்.