தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 27 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. தேசிய தலைமை இன்று அல்லது நாளை வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திரமோடி ஏப்ரல் 3-ந்தேதி தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வர உள்ளார். சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் பிரதமர் மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார். இதில் புதுச்சேரி கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அதனை முடித்துவிட்டு அன்றிரவு சென்னைக்கு பிரதமர் மோடி வருகிறார்.
சென்னையில் தங்கும் பிரதமர் மோடி, 4-ந்தேதி பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுடன் தேர்தல் பிரசாரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி மயிலாப்பூர் தொகுதியில் ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.