தமிழக செய்திகள்

வெளியானது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்

மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு 14417,104,14416 எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத் தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதினர். வினாத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது.

அதன்படி, இன்று காலை சரியாக 9.30 மணிக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே தேர்வு முடிவு தொடர்பாக மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு 14417,104,14416 எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.