தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது.
இந்த தேர்தலில் தவெக தனித்துப்போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளையும் தவெக தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தவெக நிர்வாகிகளுடன் போட்டோ ஷூட் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை 2000 பேரை விரைவில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, 2000 நிர்வாகிகளுடனும் தவெக தலைவர் விஜய் புகைப்படங்கள் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை விஜய் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்காக தவெக தலைவர் விஜய் சுமார் 25 நாட்கள் பிரச்சார பயணத்திட்டத்தை வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதுச்சேரி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு தவெக தேர்தல் பணிகளை விஜய் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.