நாடு முழுவதும் நீண்ட இடைவெளிக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்ற சூழலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.14 காசுகளும், டீசல் விலை ரூ3.11 காசுகளும் உயர்ந்துள்ளது. இது நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.