தமிழக செய்திகள்

திமுக ஆட்சியில் லஞ்சம்: அமைச்சர் மரியவில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடி

மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு எதிரான மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து சென்னன உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அனுமதி பெற லஞ்சம் வாங்கப்பட்டதற்கு நானே நேரடி சாட்சி என நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் கடந்த 24-ஆம் தேதி சட்டமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்தார்.

இதையடுத்து, லஞ்சம் கொடுத்ததற்காக மரிய வில்சனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் கே.சிவசுப்பிரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில்,"லஞ்சம் வாங்குவது மட்டுமல்லாமல், கொடுப்பதும் குற்றம் என்பதால், லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி புகார் அளித்தேன்.

சட்டமன்றத்தில் அமைச்சரின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வெறும் அரசியல் பேச்சாக புறந்தள்ளிவிட முடியாது. சட்டமன்றத்தில் உறுப்பினர் பேசும் பேச்சு தொடர்பாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என்ற சட்டப் பாதுகாப்பு என்பது, சட்டமன்றத்துக்கு வெளியில் நடந்த இந்த நிகழ்வுக்கு பொருந்தாது.

எனது புகாரின் அடிப்படையில், அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு எதிரான மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து சென்னன உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT