தமிழக செய்திகள்

செங்கல்பட்டு நகராட்சி அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது

அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

வழக்கு பதிவு செய்த போலீசார் அந்தோனி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அருகே செங்கல்பட்டு நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. நகரத்தில் உள்ள 33 வார்டுகளில் சேகரமாகும் அனைத்து குப்பை கழிவுகளும் இங்கு கொண்டு போய் கொட்டப்படுகிறது.

மக்கும் குப்பைகள்

இங்கு மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் பிரித்தெடுக்கப் பட்டு வருகிறது. நேற்று நகராட்சி பணி நிமித்தமாக அரசு ஊழியர்களான நகராட்சி ஆணையர் சுமா, துப்புரவு ஆய்வாளர் ஆல்பர்ட் அருள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் குப்பை கிடங்கை பார்வையிட சென்றதாக கூறப்படுகிறது. அச்சமயத்தில் பச்சையம்மன் கோவில் பகுதியில் குடியிருக்கும் அந்தோணி (வயது37) மற்றும் சிலர் அங்கு இருந்த ஆணையர், துப்புரவு ஆய்வாளர் மற்றும் ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

வழக்கு பதிவு

மேலும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான துப்புரவு ஆய்வாளர் ஆல்பர்ட் அருள் செங்கல்பட்டு நகர போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்தோனி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT