திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நவ.24ம் தேதி மட்டும் ஒரே ஒருமுறை தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை வரவேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;
தமிழகம் முழுவதும் முருகனின் திருநாமம் ஒலிக்கும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக, திருப்பரங்குன்றத் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவே விடமாட்டோம் எனத் திமுகவும், தவெகவும் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளையும் முறியடிக்கும் வகையில், வரும் 24-ஆம் தேதி மகா கார்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதியளித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தலைவணங்கி வரவேற்கிறேன்.
பல ஆண்டுகளாக முருக பக்தர்களின் நெஞ்சங்களை அழுத்தி வந்த சோகமும், கோடிக்கணக்கான இந்துக்களின் கண்களில் குடிகொண்டிருந்த ஏக்கமும் இன்று பஞ்சாகப் பறந்து விட்டன!
‘மத நல்லிணக்கம்’ என்ற பெயரில் இந்துக்களின் அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கத் துடித்தவர்களின் சதித்திட்டங்களை தவிடுபொடியாக்கும் வகையில், மதவாத அரசியலின் மீது அடிக்கும் சம்மட்டி அடியாக வழங்கப்பட்ட இத்தீர்ப்பினை வாசித்த மறுநொடி எனது கண்கள் கலங்கிவிட்டன.
முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்காக கால் கட்டை விரல் தேய நீதிமன்றங்களின் படியேறி போராடிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், ஒரு அரசியல் தலைவராக அன்றி, எம்பெருமான் முருகனின் ஆஸ்தான பக்தனாக எனது கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஆயிரம் கரங்கள் தடுத்தாலும், குன்றம் முழுவதும் குமரனுக்கே சொந்தம்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீர வேல் முருகனுக்கு அரோகரா!” எனக் குறிப்பிட்டுள்ளார்.