பெரியார் அறிவுலகம்
தமிழக செய்திகள்

பெரியார் அறிவுலகம் புத்தகம் விவகாரம்: பொது நூலகத்துறை இயக்குநர் பதவி நீக்கம்

புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் கோடிக் கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு.

கோவையில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, கடந்த அக்டோபர் 16-ந்தேதி தமிழக முதல்வர் விஜயால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூல் கொள்முதலில் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

திமுக-வினர் தவெக மீதும், தவெகவினர் திமுக மீதும் குற்றம்சாட்டி வருகின்றனர். நேற்று அமைச்சர் ராஜ்மோகன் ஆதாரத்துடன் கொள்முதல் மற்றும் பணம் விடுவிப்பு திமுக ஆட்சியில் நடந்ததாக தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயந்தி கூடுதல் பொறுப்பாக, பொது நூலகத்துறையின் இயக்குநராகவும் பதவி வகித்து வந்தார்.

பொது நூலகத்துறை இயக்குநர் நீக்கம்

இந்த நிலையில், பெரியார் அறிவுலக விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயந்தியிடம் இருந்து கூடுதல் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பொது நூலகத் துறையின் புதிய இயக்குநராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷஜீவனா நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT