நீ செய்த சாதனை புரிய 300 ஆண்டு வாழ்ந்தவனாலும் முடியாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து வெளிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அண்ணா!
காலவெளியில்
உன் இருப்பு சிறிதுதான்
நீ வாழ்ந்தது
59.4 ஆண்டுகள்
உன் பொதுவாழ்வு
35 ஆண்டுகள்
கட்டியெழுப்பிய கட்சியோடு
19.5 ஆண்டுகள்
ஆட்சிப் பொறுப்பில்
வெறும் 22 மாதங்கள்
ஆனால்,
நீ செய்த சாதனை புரிய
300 ஆண்டு
வாழ்ந்தவனாலும் முடியாது
உன் பெயர் சொல்லாமல்
அரசாள இயலாது
உன் கொள்கை இல்லாமல்
அரசியல் கிடையாது
நீ
சாமானியர்க்காகவே வாழ்ந்தவன்;
சாமானியனாகவே மரித்தவன்
பூமியின் மீது
அதிகச் சிலைகள் புத்தருக்கு;
இந்தியாவில் அம்பேத்கருக்கு;
தமிழ்நாட்டில் உனக்கு
பொன்னடிகளுக்குப்
புகழ் வணக்கம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.