கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.
பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணா தெரு இடையே போதுமான சாலை வசதிகள் இல்லை. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை இருந்தது.
எனவே இப்பகுதியில் பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது நிறைவேற்றப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தனது சொந்த தொகுதி மக்களின் 30 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் விஜய்யின் உத்தரவுப்படி கணபதிதெரு, ராம கிருஷ்ணன் தெரு இடையே பாதை ஏற்படுத்தப்பட்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு செல்ல முடியும். இதனை அப்பகுதி மக்கள் வரவேற்று உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.
முதலமைச்சர் விஜய்க்கு எங்களது நன்றி. இதுபோலவே, பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகள், கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும் மற்றும் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதை கண்டறிந்து மாற்றி அமைப்பது உள்ளிட்ட பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், அனைத்து பகுதிகளிலும் சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர் என்றார்.