பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் திடீரென பொதுமக்கள் இன்று காலை அந்தியூர் அம்மாபேட்டை சாலையில் திடீரென காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூதப்பாடி ஊராட்சியில் 6-வது வார்டு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர்.
இவர்களின் அன்றாட குடிநீர் தேவையை தீர்க்கும் விதமாக பூதப்பாடி பகுதியில் இருந்து போர்வெல் மூலமாகவும் காவிரி ஆற்று குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியில் சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் திடீரென பொதுமக்கள் இன்று காலை 6.45 மணியளவில் அந்தியூர் அம்மாபேட்டை சாலையில் திடீரென காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீருக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.