அப்பகுதி மக்கள் பொன்னேரி நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். சுகாதார ஆய்வாளர் சாமுவேல் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து அப்பகுதி முழுவதும் வீடுகளை சுற்றிலும் மருந்து அடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
பொன்னேரி நகராட்சிக்கு அப்துல் கலாம் நகர் 100-கும் மேற்பட்ட வீடுகள். திருமண மண்டபங்கள், டீக்கடைகள் உள்ளன. கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் உள்ள வீடு மற்றும் கடைகளில் ஈக்கள் குவியல் குவியிலாக படையெடுத்து வருகிறது. வீடுகளில் பாத்திரங்கள், சோபாக்கள் உணவுகள், துணிகள், மீது இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். ஈக்களை விரட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது.
ஈக்களினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வீடுகளில் இருந்து சரியாக சாப்பிடவும், தண்ணீர் குடிக்க முடியாமலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் பொன்னேரி நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். சுகாதார ஆய்வாளர் சாமுவேல் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து அப்பகுதி முழுவதும் வீடுகளை சுற்றிலும் மருந்து அடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, ஆரணி ஆற்றின் கரையோரம் நகராட்சி குப்பைகள் கொட்டுவதால் அதில் இருந்து அதிக அளிவில் வீடுகளுக்க கொசுக்கள் மற்றும் ஈக்கள் படையெடுத்து வருகின்றன. இதனால் வீட்டிற்கு உட்காரவும், சாப்பிட முடியாமல் அவதிப்படுகிறோம். இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.