திருவள்ளூரில் துணை முதலமைச்சர உதயநிதி ஸ்டாலின் வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வேட்பாளர் வி.ஜே.ராஜேந்திரனுக்கு வாக்கு அளியுங்கள் என
கேட்க இங்கு வந்தேன். ஆனால், இங்கு பார்த்த பிறகுதான் அனைவரும் திமுகவிற்கு தான் வாக்கு அளிப்பேன் என முடிவு செய்துள்ளீர்கள் என்று..
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை 22,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தீர்கள்.
இந்த முறை சுமார் 50,000 வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் ஜெயிக்க வைக்க வேண்டும். செய்வீர்களா..? செய்வீர்களா?
உங்களுக்கு நன்கு பரீட்சயமானவர் வி.ஜி.ராஜேந்திரன். டாக்டர் கலைஞருடை அன்பை பெற்றவர். நம்முடைய தலைவருக்கும், பாசத்திற்கும் உரியவர்.
அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். ஆனால், வேலை என்று வந்துட்டால் தொகுதிக்கு என்ன வேண்டும் என்று சண்டைபோட்டு கேட்டு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.