சென்னை உயர்நீதிமன்றம்-பார்த்திபன்
தமிழக செய்திகள்

சாதி, மதமற்றவர் என உடனடியாக சான்றிதழ் வழங்க சட்டம் நிறைவேற்ற உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் நடிகர் பார்த்திபன் வழக்கு

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில், நடிகர் பார்த்திபன் சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற்றுள்ளார்.

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற்றுள்ளார் பார்த்திபன்

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் பார்த்திபன் சாதி, மதமற்றவர் சான்றிதழ் பெற்றார். அந்த சான்றிதழை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜராகி காண்பித்தார். அப்போது நீங்கள் மட்டும் பயன் அடைந்தார் போதாது, இதுபோன்று சான்றிதழ் பெற விரும்புவோர் பயனடைய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற அல்லது அரசாணை வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளுநருக்கும் அப்போதைய அரசுக்கும் சுமூக உறவு இல்லாததால் சட்டம் இயற்றப்படவில்லை. தற்போது அதுபோன்ற நிலை இல்லை. இதனால் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு ஆகஸ்ட் 3-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.