தமிழக செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்தடுத்து சிறுமிகளை கடத்த முயன்ற சம்பவத்தால் மக்கள் பீதி

சிறுமி சத்தம் போடவே சிறுமியை விட்டு விட்டு தப்பியோடி விட்டனர். இந்த வழக்கில் நேற்று 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளை கடத்த முயற்சிக்கும் சம்பவம் பெற்றோர்களிைடயே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமாகி ஒரு மாதத்தை கடந்தும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிறுமிகளை கடத்த முயன்ற சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் அருகே அய்யூர் அகரத்தில் தெருவில் விளையாடிய சிறுமியை வடமாநில வாலிபர் கடத்த முயன்ற சம்பவம் நடந்தது. அவர்களை மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

செஞ்சி

அதனை தொடர்ந்து செஞ்சி அருகே ஜெயங்கொண்டம் கிராமத்தில் கடந்த 10-ந் தேதி சிறுமி ஒருவரை ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் கடத்த முயன்ற சம்பவம் நடந்தது. சிறுமி சத்தம் போடவே சிறுமியை விட்டு விட்டு தப்பியோடி விட்டனர். இந்த வழக்கில் நேற்று 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம்

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு விழுப்புரம் அடுத்த கண்டமானடியை சேர்ந்த சிறுமி ஒருவர் கோவில் அருகே பட்டாசு வெடித்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த 2 பேர் சிறுமியை கடத்த முயன்றனர். சிறுமி அவர்களின் கையை கடித்து தப்பினார். இதுதொடர்பாக போலீசார் சிறுமியை கடத்திய மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளை கடத்த முயற்சிக்கும் சம்பவம் பெற்றோர்களிைடயே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT