பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பழனி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபாலு சேனாபதி, பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் கோயில் அறங்காவலர் அன்னபூரணி ஆகியோர் சிபிஐ விசாரணைக்கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
சிபிசிஐடி போலீசாரின் விசாரணை சரியானப் பாதையில் செல்வதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டநிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை எனக் கூறி நீதிபதிகள் சி. வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு தவறான ஆவணங்கள் மூலம் இரண்டு தனி நபர்களுக்கு சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் முறைகேடாகப் பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட, இடைத்தரகர்கள் மற்றும் நிலத்தை வாங்கியவர்கள் எனப் பலரை சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.