தமிழ்நாட்டின் உள்ள விவசாயிகளின் நலன்களைக் கருதி நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிகாரப்பூர்வமாக அறிக்கை மூலம் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் ஒரு குவிண்டால் நெல் 2,441 ரூபாய் இதை உற்பத்தி செய்வதற்கே விவசாயிகளுக்கு அதிக அளவில் செலவாகிறது. எனவே, குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது விவசாயிகளுக்கு போதிய லாபத்தை தருவதில்லை.
மத்திய அரசு சமீபத்தில் நெல் கொள்முதலை நாடுமுழுவதும் ஒரு குவிண்டாலுக்கு 72 ரூபாய் மட்டுமே அதிகரித்திருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் நெல் கொள்முதலிற்கு செலவுகள் அதிகம் இருப்பதால், 72 ரூபாய் என்பது எந்த வழியிலும் போதாது.
இந்த 72 ரூபாய் அதிகரித்தது 'யானைப்பசிக்கு சோளப்பொரி' போன்றது என்றும், இது முற்றிலும் போதுமானது அல்ல என அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.
இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் ஒரு குவிண்டால் ரூ. 3,169 - திற்கும், தெலுங்கானாவில் ரூ. 2,869 திற்கும் இருக்கும் நிலையில் அவர்கள் தங்களின் மாநில பட்ஜெட்டிலிருந்து விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகையை வழங்கி அதிக அளவில் நெல் கொள்முதலை பெற்று வருகின்றனர்.
ஆனால் நம் தமிழ்நாட்டில் நெல்லின் விலை ஒரு குவிண்டாலுக்கு 2,441 ரூபாய் என்ற அளவிலேயே இருக்கிறது. இதனால் தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை மிகவும் குறைவாக உள்ளதால், இங்குள்ள விவசாயிகள் போதிய லாபமின்றி தவிக்கிறார்கள்.
இனியாவது, தமிழ்நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் வாங்கிய கடனில் இருந்து மீளவும் ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தது 3,500 ரூபாய் கொள்முதல் விலை கிடைக்க வேண்டும்.
இதற்கு மத்திய அரசு வழங்கும் தொகையோடு சேர்த்து, தமிழக அரசு தனது சொந்தப் பங்களிப்பாக மீதமுள்ள தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அன்புமணி கூறிவருகிறார்.