தமிழக செய்திகள்

கும்பகோணம்: 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து முதியவர் உயிரிழப்பு

சாலையில் யாசகம் பெற்று வந்த நபரை 10 நாய்கள் கடித்துள்ளன

நாய்கள் கடித்து முதியவர் மரணம்

கும்பகோணம்: பாலக்கரை - சென்னை சாலையில் 10க்கும் மேலான நாய்கள் கடித்ததில் அரியலூர் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சின்னதுரை(75) என்ற முதியவர் உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு

சாலையில் யாசகம் பெற்று வந்ததாக கூறப்படும் சின்னதுரையை 10 நாய்கள் கடித்துள்ளன. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இதற்கு முன் ஒரே நாளில் 27 பேரை கடித்த தெருநாய்

கடந்த மாதம் புவனகிரியில் சாலையில் நடந்து சென்றவர்கள், பைக்கில் சென்றவர்கள் என ஒரே நாளில் மொத்தம் 27 பேரை தெருநாய் கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெருநாய் கடி பிரச்சனைக்கு தீர்வு எப்போது?

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய் கடி பிரச்சனைக்கு தீர்வு எப்போது என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கேள்வியாகவும் எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது.