தமிழ்நாடு செய்திகள்

DMK | அரசியல் களத்தில் நம் கை ஓங்கி இருக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாலை மலர்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் பணியில் திமுக தான் நம்பர் 1 ஆக இருந்து வருகிறது.

அரசியல் களத்தில் நமது கை ஓங்கி இருக்கிறது. நலத் திட்டங்களால் மக்களிடையே பெருகும் ஆதரவு.

200 தொகுதிகளில் வெல்வது இலக்கு என்பதை எண்ணி பணியாற்ற வேண்டும்.

தேர்தல் முடியும் வரை எந்த உட்கட்சி பிரச்சனையும் இருக்கக்கூடாது.

யாராவது தேவையின்றி கட்சிக்குள் குழப்பமோ பிரச்சனையோ உண்டாக்கினால் அவர் எந்த பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை பாயும்.

வேட்பாளர் தேர்வு, யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.

தேர்தலில் அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே அமைச்சர் பதவி வழங்கப்படும்.

தான் மட்டுமின்றி பிறரையும் வெல்ல வைத்து கட்சியின் வெற்றிக்கு உழைப்பவர்களுக்கு உண்டான பரிசு தேர்தலுக்குபின் தேடி வரும்.

தனிப்பட்ட நிர்வாகிகளை விட கட்சியின் நலன் தான் எனக்கு முக்கியம்.

உறுதியாக வெற்றி பெறும் ஆற்றல் உள்ளவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படும். தான் மட்டுமின்றி பிறரையும் வெல்ல வைத்து கட்சியின் வெற்றிக்கு உழைப்பவர்களுக்கு உண்டான பரிசு தேர்தலுக்குபின் தேடி வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.