தஞ்சாவூர்:
வேளாண் பட்ஜெட் குறித்து தஞ்சையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. கருத்துக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தலைமை கொறடா கோவி செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் கலந்து கொண்டனர். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள், தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் பயனுள்ளதாக இருந்தது என்றும், விவசாயிகளிடம் இருந்து வரும் கோரிக்கைகள் நிச்சயம் வேளாண் பட்ஜெட்டில் இருக்கும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்தார்.
இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் அமைச்சர் கூறினார்.