தமிழக செய்திகள்

3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழகத்தின் எல்லைப் பகுதி மாவட்டங்களில் பலத்த மழை பதிவாகி வருகிறது.

ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை தீவிரமடையும்

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

24 மணி நேரத்தில் 11 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.