தமிழக செய்திகள்

த.வெ.க. அரசு தொடர்வதற்கு எதிர்ப்பு- எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி உருவாகும் என நினைத்து தான் மக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்துள்ளனர்.

தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது,"சட்டசபை மரபுகளை கடைப்பிடிக்க வேண்டும். முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை யாரும் வழிமொழியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,"நம்பிக்கை கோரும் தீர்மானத்தை யாரும் வழிமொழியத் தேவையில்" என்றார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இருதலைவர்களையும் குறிப்பிட்டுதான் மக்களை சந்தித்து 47 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிமுக ஆட்சி உருவாகும் என நினைத்து தான் மக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்துள்ளனர், 47 தொகுதிகளிலும் வெற்றியும் பெற்றோம்.

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்கால ஆட்சி, அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்தது.

அ.தி.மு.க.வில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையில் ஒரு தரப்பை முதலமைச்சர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல.

குதிரை பேரம் நடப்பதாக சந்தேகிக்கிறேன். 47 பேர் இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்கள்.

66 சதவீதம் பேர் த.வெ.க.வுக்கு வாக்களிக்கவில்லை.

அதிமுகவில் ஒரு சிலருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக ஆசை காட்டுவதாக தகவல் வருகிறது.

த.வெ.க. அரசு தொடர்வதற்கு ஆதரவு அளிக்கவில்லை" என்றார்.

எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும் போது விஜயபாஸ்கருடன் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினார்.