அமைச்சர் அருண்ராஜ்
தமிழக செய்திகள்

எதிர்க்கட்சியினர் துபாய்க்கு போய் தொழில் செய்யலாமா? என கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்: அமைச்சர் அருண்ராஜ்

ஈபிஎஸ் என்பதை விட கேகேஎஸ் என்றுதான் சொல்ல வேண்டும். கூவத்தூர் குறுக்குவழி சாமிதான் அவர்.

தாராபுரம் இடைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் சத்யபாமா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் பிரசாரம் செய்தார். இதற்காக மாருதி நகரில பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சர் விஜய் பேசுவதற்கு முன்னதாக அமைச்சர் அருண்ராஜ் பேசினார்.

அப்போது அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் தங்க மகன், தாய்மார்களின் செல்லப்பிள்ளை. பெண்களின் பாதுகாவலன். குழந்தைகளின் தாய்மாமன். அது நம்ம் தளபதி. தளபதி மதுரைக்கு சென்றார். மதுரையே குலுங்கிச்சி. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே மக்கள் செல்வாக்கும் அதிகம் பெற்ற தலைவர் தளபதி.

எதிர்க்கட்சிக்காரரர்கள் இந்த மண்ணில் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியுமா? துபாய்க்கு போய் தொழில் செய்யலாமா?. இரண்டு பேரும் சேர்ந்து கூட்டணி அமைச்சா, ஏதாவது வாய்ப்பு இருக்குமா? என்று கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிளி ஜோசியம் பார்த்தாலும் சரி, குருவி சகுனம் பார்த்தாலும் சரி, தவெக இருக்கும் வரை எதிர்க்கட்சி வரிசையில்தான் இருக்க போறீங்க.

2026 பொதுத்தேர்தல் முடிவு விபத்து அல்ல

2026 பொதுத்தேர்தல் முடிவு விபத்து அல்ல. தமிழக மக்கள் அரசியலை எப்படி புரிந்து வைத்துள்ளர் என்பதின் வெளிப்பாடு. தமிழக மக்கள் பகுத்தறிவோடு சிந்தித்து வாக்களித்திருங்காங்க. அதற்கான சாட்சிதான் 2026 பொதுத்தேர்தல்.

கொங்கு மண்டலத்தில் 60 இடங்களில் 28 இடங்களை வெற்றி பெற வைத்து தவெக-வின் கோட்டை என நிரூபித்துள்ளீர்கள். இந்த கொங்கு மக்களுக்கு என்னுடைய சல்யூட்.

கொங்கு மக்கள் என்றால் நியாபகத்திற்கு வருவது உண்மை, கடின உழைப்பு, சுயமரியாதை. தற்போது வேதனையான விஷயம் என்றவென்றால் தானும் கொங்கு மண்டலக்காரன் என்று சொல்லிக்கிட்டு, கொங்கு மண்டல பிரதிநிதி என்று சொல்லிக்கிட்டு தலைமை பண்மே இல்லாத ஒரு தலைவர். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும்.

கொங்கு மண்டல மக்களின் அடிப்படை பண்புகளுக்கு எதிராக, உண்மைக்கு புறம்பாக குறுக்கு வழியில, பதவி மட்டுமே முக்கியம் என்பதற்காக செய்யக்கூடாத வேலையெல்லாம் செய்து கொண்டிருக்காரு.

கூவத்தூர் குறுக்குவழி சாமிதான்

திமுக கூட கூட்டணி வைக்க முயற்சி செய்யலையா? என கொங்கு மக்கள் அவரிடம் சத்தியம் செய்ய கேட்க வேண்டும். கொங்கு மக்கள் என்ன ஆனால் எனக்கென்ன? என்று பொய் சத்தியம் கூட செய்வாரு. அதுதான் ஈபிஎஸ். அவரை ஈபிஎஸ் என்பதை விட கேகேஎஸ் என்றுதான் சொல்ல வேண்டும். கூவத்தூர் குறுக்குவழி சாமிதான் அவர்.

கூவத்தூர் குறுக்குவழி சாமியிடம் கேட்கும் ஒரு கேள்வி, ஓ.பி.எஸ்.-ஐ ஏன் கட்சியை விட்டு நீக்கினிங்க. திமுக உடன் உறவை வைச்சிருக்கார் என்பதனால்தானே. அதே காரணத்திற்கான அதிமுக-வின் உண்மையான தொண்டர்களாக உங்களுடைய அடிப்படை உறுப்பினர் பதவியை இழக்கதான் போறீங்க. இது கண்டிப்பா நடக்கதான் போகிறது.

இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளனர் என்றால் ஏன் என்று சிந்தித்து பாருங்கள். அவர்களுக்கு ஆட்சியை இழந்தது பெரிது அல்ல. திரும்பவும் ஆட்சிக்கே வர முடியாது என்ற பதட்டம்தான் மறைமுக கூட்டணியில் ஈடுபட வைச்சிருக்கு.

இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் பேசினார்.

SCROLL FOR NEXT