நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்பில் சர்வதேச மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் உருவங்கள் மெழுகு கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளன.
பொது மக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்டு உள்ள இந்த அருங்காட்சியகத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின், அன்னை தெரசா, நடிகர்கள் ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
ஊட்டி சர்வதேச அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் மேற்கண்ட மெழுகு சிலைகள் தற்போது சமூகவலைதளங்களிலும் கவனம் பெற்று வருகின்றன.
ஊட்டியில் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் அங்கு வைக்கப்பட்டு உள்ள மெழுகு சிலைகள் உருகாமல் திடமாகவும், தத்ரூபமாகவும் காட்சிதருகின்றன.
இதனால் ஊட்டி படகு இல்லத்துக்கு படகு சவாரி செய்ய வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள மெழுகு சிலைகள் முன்பு ஆர்வத்துடன் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.